வாழ்க்கை என்பது
ஒற்றை நாணயம்
தோல்வியும்,வெற்றியும்-அதன்
இரண்டு பக்கங்கள்.
வெற்றியில்
உழழ்வதும்
தோல்வியில்
துவழ்வதும்
மானுட இயல்பு.
லட்சியத்தால்
மனதிற்குள்
கோடுபோடு
முயற்சியால்
அதற்கு ரோடுபோடு.
பயம்தான்
முயற்சியின்
முன்விரோதி
பயத்திற்கு பயம்காட்டு.
தடைக்கற்களில்
தவமிரு
தட்சணைகள்
தானாய் வரும்.
வெண்ணிலவிற்கு
ஆசை வேண்டாம்
கை
மண்ணளவிற்கு
முயற்சி செய்.
அகந்தையை
அகற்று
அன்பு
அரவணைக்கும்.
தூற்றலை
துரத்து
ஆற்றல்
ஆராதிக்கும்.
இழப்பை
மதிப்பிடு
அது அனுபவமாகும்
இருப்பதில்
செயல்படு
அது ஆரோக்கியமாகும்.
நம்
செயல்களல்லவா
நாளை நம்மைப்
பின் தொடரும்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வாங்க வாங்க...கலக்குங்க...வாழ்த்துக்கள்
தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி பேபி பவன் அவர்களே.
Post a Comment