> >

Saturday, November 24, 2007

குரல் கொடு தமிழா

தமிழ் தாய்
மண்
அடகு போகின்றது.

மீட்டெடுக்க
கவியரசர்களைக்
காணோம்
தன்னலப் பேரரசகள்
முளைக்கிறார்கள்.

சிருங்காரத்தை
சிற்பமாக்கி
சித்து விளையாடும்
சினிமா.
வக்கிர சிந்தனையின்
ஊற்றுக் கண்.

பண்பாட்டின் மீது
படையெடுப்பாய்...
திரைத் தொடர்கள்.
மண்ணின் மாண்புகளை
புதைத்திடும்
புதைகுழி.

ஆன்மாவைக்
குறிவைத்து
அதிரடித்தாக்குதல்.

ஜாதியில்
எரிகிறது மானுடம்
சா ''தீ'' என
சொல்வாரில்லை
அமைதி பூங்காவில்
குருதிப் பூக்கள்.

சாவுமணி
அடிக்கிறது
சர்வதேசம்.
தாங்குமோ
நம்
தமிழ்தேகம்.

களைகளின் கையில்
களைக் கொத்தி
உளிப் பிடித்தவன் எல்லாம்
சிற்பி.

அனாச்சார சுனாமி
கலாச்சாரத்திற்கு
காவலா?

விரிசலின் பிடியில்
பெற்றோர்
தன் மனப்
பரிசலின் மடியில்
மக்கள்.
ஒட்டி வாழ்ந்த
காலமெல்லாம்
குறைவில்லையே.
உறவை
வெட்டி வாழும்
காலமெல்லாம்
நிறைவில்லையே.

உலகப் பற்றாளர்களே
கொஞ்சம்
தமிழ் மண் மீதும்
பற்று வையுங்கள்.

தமிழ்த்தாய்
கண்களில்
கண்ணீர்.

மீட்டெடுக்க
கைகள் வேண்டாம்
ஒரு முறையேனும்
குரல் கொடுங்கள்.

9 comments:

Anonymous said...

"குரல் கொடு தமிழா"

ஓ....ஹோ.....

குரல் கொடுத்துட்டேனுங்னா.

said...

வார்த்தைகள் அருமையா இருக்கு..
கருத்துக்கள் வரி நெடுக்க கொட்டிக்கிடக்கு. தமிழ்,அரசியல்,சாதி,தமிழினம்,தொலைக்காட்சியின் கலாசார சிதைப்பு என
அருமையா எழுதியிருக்கீங்க..

said...

நண்பரே.. தப்பா நெனச்சிக்கலேனாக்கா.ஒன்னு சொல்லறேன்..
ஒரு கவிதைக்கு ஒரு கருத்து மட்டும்ன்னு எடுத்துக்கிட்டு சொன்னா.. படிக்கும்போது.. மனம் பல கருத்துக்களில் திசைமாறாமல் கவிதையின் மையக்கருத்தில் கவனம் செய்யும்.

said...

அப்புறம் பதிவை தமிழ்மணம்/தேங்கூட்டில் சேத்துப்புட்டுடீங்கனாக்கா.. ஒரே ரசிகர் மழைதேன்.. என்னிய மாதிரி..ஹிஹி..

said...

நல்லா எழுதுறிங்க.. நெறய எழுதுங்க.. பின்னாடி நெறய பேரு வரும்போது .. இதே கவிதைகளையும் மீள் பதிவா போடலாம். வாழ்த்துக்கள்..
அன்புடன் ரசிகன்.

said...

HI DEAR THE POETRY IS VERY WELL ALTHOUGH I M A TAMIL PERSON BUT I DON'T KNOW HOW TO WRITE TAMIL . I MYSELF ONLY KNOW READING. BUT AFTER READING UR GOLDEN LINES OF POETRY I LOVE TAMIL. NOW I M SO IMPRESS FROM YOUR POETRY , DUE TO WHICH I M GOING TO LEARN HOW TO WRITE TAMIL.

YOUR WELL WISHER FROM MIDDLE EAST.

said...

HI DEAR YOUR POETRY IS SO GOOD AND PURE THAT I WANT TO BECOME A TAMIL WRITER TILL DATE I M JUST TAMIL READER ONLY.

WELL WISHER FRAM MIDDLE EAST

said...

HI

said...

HI DEAR YOUR POETRY IS VERY NICE AND HEART TOUCHING I TELL THE REALITY THAT AFTER READING UR POETRY I REALLY WEEEP IN MY HEART .

IT IS NOT THE POETRY BUT IT IS THE REALITY OF LIFE AND IT LEADS TO A MAN TO THE RIGHT PATH .

WELL WISHER WANTS FROM YOU SOME THING MORE AND MORE