> >

Saturday, January 12, 2008

பொங்கல்

வைகறை வெயில்
பூமி வெடிப்பு
வயல்
வளர்த்த நாற்றில்.

மஞ்சள் செடிகள்
பூத்த வரப்பில்
நெருஞ்சி முட்கள்.

ஆடி ஓடிய
ஆற்றுப் படுகையில்
மணலைக் காணோம்.

ஒருமுறை
பெய்த மழையில்
கரையைக் காணோம்.

வாய்க்கால் நீரில்
உருகி நிற்கும்
ஒற்றைக் கால்
கொக்கைக் காணோம்.

மார்கழி மாசக்
கடைசிக் குளிரும்
சூடாய் தெரியும்
மனது
கண்ணீர் துளிர்க்க
வானம் பார்க்கும் விவசாயி
வாசலைத் தட்டுமே
வட்டிப் பிசாசு பெரிசாகி.

தை
பொங்க வருகிறது
குமறி.

6 comments:

Anonymous said...

நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

கவிதை நல்லா இருக்குங்க.
நம்ம பொங்கல் கரும்போட சரிங்க.

said...

பொங்கட்டும் பொங்கல்!
விவசாயி பெற்ற மகன்
பெரும் படிப்பு படித்த மகன்
வீடு தேடிச் செல்வதில்லை
வீண் பேச்சில் வாழுகின்றான்!

நான் வளர்ந்த பூமி இது
நான் செய்வேன் நல்லதின்று
குரல் கொடுத்து வந்து நன்று
நற் பணிகள் செய்திடுவோம்!

அறிவுலகம் படைத்திட்ட
அறிவாற்றல் பயன் தரவே
உழைப்பாலே உயர்ந்திடவே
உறுதி கொள்வோம் உண்மையுடன்!

பொங்கட்டும் பொங்கலின்று
புது வாழ்வு புது நினைவு
புத்துணர்ச்சி உழைப்புடனே
நம் மண்ணை உயர்த்திடுவோம்!

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அறியப்படாத அன்பர்களே.

said...

தமிழன்,
உங்களின் கவிதை அருமை. உங்களின் வருகைக்கும், கவிதைக்கும் எனது நன்றிகள்.

said...

hi me imitiyaz from singapore and try to appreciate you for your work and your thoughts and yor dreams and ur vision. i hope it is vision of the creative person i wnat to suggest you that make some poems of our prophet saw that will benefit you in here and hereafter in jennah insahllah. hope you will take my advise in ur bright future. may allah guide you at right path